25 ஆண்டுகளுக்குப்பின்! தமிழர்களின் பெருமையைக் கூறும் தொப-வின் 'அறியப்படாத தமிழகம்' நூல் ஆங்கிலத்தில் வெளியீடு

By Pothy RajFirst Published Dec 31, 2022, 1:52 PM IST
Highlights

தமிழர்களின் வாழ்க்கை, பெருமைகளைக் கூறும் தொ.பரமசிவத்தின் அறியப்படாத தமிழகம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் முன்முயற்சியோடுதான் அறியப்படாத தமிழகம் நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்யப்பட்டுள்ளது. 

தமிழர்களின் வாழ்க்கை, பெருமைகளைக் கூறும் தொ.பரமசிவத்தின் அறியப்படாத தமிழகம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசின் முன்முயற்சியோடுதான் அறியப்படாத தமிழகம் நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்யப்பட்டுள்ளது. 

ஆங்கிலத்தில் படிப்பவர்களும் தமிழர்களின் பெருமைகள், வாழ்க்கையை அறியும் விதமாக “தி ஸ்வீட் சால்ட் ஆப் தமிழ்”(The Sweet Salt of Tamil) என்ற பெயரில் ஆங்கிலத்தில்மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது

தி ஸ்வீட் சால்ட் ஆப் தமிழ் ஆங்கில நூலை வி.ராமநாராயனன் மொழிபெயர்த்துள்ளார். நவயானா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

புதிய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்: பணிகளை விரைந்து முடிக்கத் தீவிரம்

பழமையான நாகரீகத்தை தன்னகத்தே கொண்ட தமிழர்களின் வாழ்க்கை முறை, அறியப்படாத அறிய விஷயங்கள், ஆழ்ந்த வரலாறு, கிறிஸ்துவுக்கு முந்தைய 6-ம் நூற்றாண்டு சங்ககால வரலாற்று தொகுப்புகள், இலக்கியங்கள்,தமிழர்களின் வாழ்க்கை முறை, உணவு முறை, விழாக்கள், கடவுள்கள், மொழிகள் போன்றவற்றை தொ.பரமசிவம் எழுதியுள்ளார். 

நவயனா பதிப்பகத்தின் உரிமையாளர் எஸ்ஆனந்த் கூறுகையில் “தமிழகத்தின் அறியப்படாத, சொல்லப்படாத, அறியப்படாத அம்சங்களைப் பற்றிய தெ.பரமசிவனின் படைப்புகள் தெரிவிக்கின்றன.  காட்சிகள் மற்றும் நுண் உணர்வுகளுடன் உரை அடர்த்தியாக இருக்கிறது. தொபாவின் அறியப்படாத தமிழகம் 7 தொகுப்புகளாக தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை விளக்குவதாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

கடவுள் ராமர், இந்துத்துவா பாஜகவுக்கு மட்டுமே உரிமையானது அல்ல! உமா பாரதி பேச்சு

உதாரணமாக தமிழர்களின் உணவுமுறை, கடவுள்களை வணங்கும் முறை, உறவு முறை எவ்வாறு இருந்தது, எதற்கெல்லாம் தமிழர்கள் முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதை அறியபப்டாததமிழகம் நூல் விளக்குகிறது

தமிழர்களின் வாழ்க்கையில், மிளகாய் எந்பது 16ம் நூற்றாண்டில்தான் அறிமுகமாகியுள்ளது.அதிலும் பச்சை மிளகாயை தமிழர்கள்உணவில் சேர்க்காமல் காய்ந்த மிளகாயை சேர்த்துள்ளனர். அதற்கு முன் தமிழர்கள் தங்கள் உணவுக்கு மிளகைத்தான் பயன்படுத்தியுள்ளனர்.

கருங்கறி அல்லது கறியைத்தான் பெரும்பாலும் தமிழர்கள் சமைத்து உண்டனர், கறிக்கு சேர்மானப் பொருளாதார சுவையூட்டியாக மிளகைத்தான் பயன்படுத்தினர். இதில் கறி என்ற வார்த்தை இறைச்சியைக் குறிக்கிறது. தமிழர்கள் வால்மிளகை பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தவில்லை என்று அந்த நூலில் தொபா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற எண்ணற்ற அறிய தகவல்கள் அந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
தமிழர்கள் உணவு முறை எவ்வாறு இருந்தது என்பதை அந்த நூலில் குறிப்பிடுகிறது. அதாவது, தமிழர்கள் தங்கள் உணவை தீயில்சட்டும், வேகவைத்தும், வறுத்துமே சாப்பிட்டுள்ளனர். இப்போது தமிழர்க்கள் சாப்பிடும் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெயில் முழுவதுமாக பொறிக்கும் உணவுகள் அப்போது இல்லை.
தமிழர்கள் தங்கள் உணவில் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்தவில்லை. ஆனால், தற்போது தமிழர்களின் வீடுகளில் எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது. எண்ணெய் இல்லாத, நெருப்பில் சுட்ட, வேகவைத்த உணவுகள் மறைந்து வருகின்றன என்று தொபா தெரிவித்துள்ளார்

லீவில் இருக்கும் ஊழியரை தொந்தரவு செய்யக்கூடாது.. மீறினால் 1 லட்சம் அபராதம் - ட்ரீம் 11 நிறுவனம் அதிரடி

தமிழர்களின் ஆடை குறித்து குறிப்பிடுகையில், தமிழர்கள் எந்த வகையான ஆடைகளை அணிந்தார்கள், உறவு முறைகள், திருமணங்கள் நடக்கும் முறை, தாலி குறித்த அம்சங்கள், குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் முறையும் நூலில் சொல்லப்பட்டுள்ளன

தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையில் தாலியின் மகத்துவம் என்ன, எந்தெந்த வகையான தாலிகளை பெண்கள் அணிந்தார்கள், சங்ககாலத்தில் தாலியுடன் சேர்த்து பெண்கள் எந்த ஆபரணங்களை அணிந்தார்கள், புலிப்பல், தங்கக்காசுகள், தங்க இலை போன்றவற்றை பெண்கள் அணிந்தமைக்கான சான்றுகளை தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் கொண்டாடிய விழாக்கள், வழிபட்ட நாட்டார் தெய்வங்கள், பல்வேறு சமூகத்து மக்களிடையே எவ்வாறு ஒற்றுமைஇருந்தது, சாதிக்களிடையே உறவு முறை எவ்வாறு இருந்தது, தமிழ்விளையாட்டுகள், கலாச்சாரங்கள், தமிழ் பல்வேறு பிராந்தியங்களில் பேசப்பட்டவிதம், தமிழ்கலாச்சாரத்துக்குள் பல்வேறு மதங்கள், சமூகங்கள் எவ்வாறு நுழைந்தன, எந்த காலக்கட்டத்துக்குள் வந்தன என்பது குறித்த வரலாற்று ஆய்வுகள் நூலில் உள்ளன
 

click me!