அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அடுத்த அதிரடி...! விழிப்பிதுங்கும் மாணவிகள்....!

By thenmozhi gFirst Published Dec 1, 2018, 3:36 PM IST
Highlights

மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு, படிப்பு பாதிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு, படிப்பு பாதிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், மாணவிகள் பள்ளிக்கு வரும் போது கொலுசு அணிவதற்கு தடையா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு, படிப்பு பாதிக்க  வாய்ப்பு உள்ளது...ஆனாலும் இது குறித்த அறிவிப்பு என்னுடைய கவனத்திற்கு வரவில்லை என கூறினார்.

அதே வேளையில் மாணவிகள் பள்ளிக்கு வரும் போது பூ வைத்துக்கொண்டு வருவதில் தடை இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன்,  எந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டாலும் அது மாணவர்களின் நலனிலும், கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மட்டுமே  இருக்கும்.. இதுவரை பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி திட்டங்களை கொண்டு வந்தார். இந்த நிலையில் தான் இது போன்ற ஒரு அறிவிப்பும் வெளியாகி அமைச்சரின் இந்த அறிவிப்பும் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.  

click me!