தமிழ்நாடு காவல்துறையின் FRS இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்; களமிறங்கிய சைபர் கிரைம் போலீஸ்!

By SG BalanFirst Published May 5, 2024, 12:58 PM IST
Highlights

குற்றவாளிகளைக் அடையாளம் காண பயன்படும் தமிழகக் காவல்துறையின் இணையளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையின் இணையதளம் முடக்கப்பட்டு, பாஸ்வேர்டு திருடப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு காவல்துறை குற்றவாளிகள் குறித்த தரவுகறை சேமித்து வைக்க பிரத்யேகமான மென்பொருள்களை பயன்படுத்துகிறது. குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் தொடர்பான தகவல்கள் FRS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்த எஃப்ஆர்எஸ் தளத்தை மொன்பொருள் மூலமாகவும் காவல்துறையநினர் பயன்படுத்தி வருகின்றனர். குற்றவாளிகளைக் அடையாளம் கண்டு, கைது செய்ய இந்த இணையளம் மற்றும் செயலி மிகவும் பயனுள்ளதாக இருந்துவருகிறது. இந்நிலையில், தமிழக காவல்துறையின் இந்த இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"எஃப்ஆர்எஸ் மென்பொருள் சிடாக் கொல்கத்தா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த மென்பொருள் தமிழகம் முழுவதும் 46,112 பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் மார்ச் 13-ம் தேதி தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையால் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், எஃப்ஆர்எஸ் இணையதளத்தில் விதிமீறல் இருப்பதாக ஒரு முகவரியில் இருந்து தகவல் வந்தது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அட்மின் அக்கவுன்ட்டில் பாஸ்வேர்டு ஹேக்கர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த அட்மின் அக்கவுன்ட்டில், பயனர்களுக்கான ஐ.டி.யை உருவாக்குதல், எவ்வளவு தேடுதல் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது உள்ளிட்ட விவரங்களை மட்டுமே பார்க்க முடியும்.

இது சம்பந்தமாக, எல்காட், தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை, சிடாக் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்"

இவ்வாறு காவல்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!