Education : தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணம்.! கல்வியில் புரட்சி செய்தவ முதலமைச்சர்- செஞ்சி மஸ்தான்!

By Ajmal Khan  |  First Published Jul 21, 2024, 7:31 AM IST

கல்வியில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதோடு அதனை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் முன் உதாரணமாக திகழ்ந்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். 
 


மாணவர்களுக்கான எண்கணித போட்டி

சென்னை அரசு பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியன் அபாகஸ் நிறுவனம் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக கணித பாடப்பிரிவில் அவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் விதமாக பயிற்சிகளை அளித்து வருகிறது.  இந்தநிலையில் இந்தாண்டு தேசிய எண்கணித  மற்றும் திறன் மேம்பாட்டுப்  போட்டியை இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

இந்த போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் செஞ்சி மஸ்தான்,  தமிழக சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அப்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாரட்டினர். இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தில் மாணவர்கள் முன்னேற்றத்திற்காக  தமிழக முதல்வர் ஸ்டாலின் கல்விக்கு முக்கியதும் கொடுத்து வருகிறார். 

கோவையில் 15 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத வீட்டில் தாய், மகள்; திகில் வீட்டில் 4 டன் குப்பைகள் அகற்றம்

தமிழக அரசின் திட்டங்கள்

கல்வில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதோடு அதனை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் முன் உதாரணமாக திகழ்ந்து வருவதாக குறிப்பிட்டார்.  நான் முதல்வன் திட்டம், புதுமை பெண் திட்டம், பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  மாணவிகளுக்கு கல்வித் உதவித்தொகை வழங்கப்பட்டது போல மாணவர்களுக்கும் கல்வித் உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

இதனை பெற்றோர்கள் பயன்டுத்தி கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக பேசிய பீட்டர் அல்போன்ஸ், இந்த எண்கணித போட்டி குழந்தைகளின் அறிவு திறைமையை மேம்படுத்த உதவும் என்பதில் ஐயமில்லை. தமிழகத்தில் முதல்வர் கல்விக்காக பல்வேறு திட்டங்களை சிப்பாக செய்து வருகிறார். அதனை குழந்தைகள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

மாணவர்கள் சாதிக்கனும்

இந்த போட்டி குறித்து இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பஷீர் அகம்மது கூறுகையில்,  உலக அளவில் இந்திய மாணவர்கள்  எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சாதனை படைத்து திகழ வேண்டும் அந்த இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணித்து வருவதாக தெரிவித்தார். மேலும்  எங்களது முதல் குறிக்கோள் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள எளிய மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த கணித பயிற்சியினை பயன்படுத்தி சாதனை மாணவர்களாக திகழ வேண்டும் என தெரிவித்தார். 

Vegetables : காய்கறிகள் விலை கூடியதா.? குறைந்ததா.? ஒரு கிலோ தக்காளி, பீட்ரூட், வெங்காயம் என்ன விலை தெரியுமா.?

click me!