Pa Ranjith : மெட்ராசை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது: பா. ரஞ்சித் அதிரடி!!

By Ajmal Khan  |  First Published Jul 21, 2024, 6:28 AM IST

ஆம்ஸ்ட்ராங்  இல்லையென்று  யாரும் ஜாலியாக இருந்து விடாதீர்கள், மெட்ராஸை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது என தெரிவித்த ரஞ்சித், சென்னையில் மட்டும் 40 சதவீத தலித் மக்கள் உள்ளார்கள் என கூறினார். 
 


ஆம்ஸ்ட்ராங் படுகொலை

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த அம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையே ஏற்படுத்திய நிலையில்,. இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.  இந்த கொலைக்கு பின்னனியில் உள்ள மற்ற நபர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு இயக்குனர் ரஞ்சித் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

undefined

இந்தப் பேரணியில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் தினேஷ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் பேசிய இயக்குனர் ரஞ்சித், ''பேரணிக்கு யாரும் காசு கொடுத்து உங்களை யாரும் கூட்டி வரவில்லை,  ஆம்ஸ்ட்ராங்கிற்காக காசு கொடுத்து கூட்டத்தை கூட்ட முடியாது'' என தெரிவித்தார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது! உடைத்து வீசப்பட்ட செல்போன் பாகங்கள் மீட்பு!

ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என எழுதியது யார்.?

அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை உணர வேண்டும. ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று கூறி சமூக வலைதளங்களில் எழுதிய அயோக்கியர்கள் யார் ? முதலில் பாஜக எழுதியது. அடுத்து திமுக ஐடி விங் எழுத தொடங்கியது. அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நீங்கள் ரவுடி என்று சொல்வீர்களா ? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான் என தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங்  இல்லையென்று  யாரும் ஜாலியாக இருந்து விடாதீர்கள், மெட்ராஸை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது சென்னையில் மட்டும் 40 சதவீத தலித் மக்கள் உள்ளார்கள்.

 பதவியை ராஜினாமா செய்யுங்கள்

நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால் அரசியல் அறிவு உடையவர்களாக மாறும்பொழுது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை மாறும் என ஆவேசமாக கூறினார். பிரியா ராஜன் மேயராகவும், கயல்விழி செல்வராஜ் அமைச்சராகவும் எப்படி ஆனார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரியா ராஜன் திமுகவில் இருப்பதால் அவர் மேயர் இல்லை. ரிசர்வேஷன் இருந்ததால் தான் பிரியா ராஜன் மேயராகவும், கயல்விழி செல்வராஜ்  அமைச்சராகவும் பதவி கிடைத்தது.  மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இருவரும் ஏன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குரல் கொடுக்கவில்லை.  நீங்கள் திமுக-வில்  இருப்பதால்தான் குரல் கொடுக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினார். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எப்பொழுது இதற்காக குரல் கொடுப்பீர்கள் ? குரல் கொடுக்கவில்லை என்றால்  பதவிகளை ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள். 

அரசியல்வாதிகள் பின்னணியில் ரவுடிகள்! ஆம்ஸ்ட்ராங் கொலை மூலம் வெட்ட வெளிச்சமானது! நாராயணன் திருப்பதி!

சென்னையில் மணிமண்டபம்

 

எங்களுக்காக குரல் ஒழிக்க வேண்டுமெ என்பதற்காக ரிசர்வேஷன் மூலம் எம்பி, எம்எல்ஏக்கள் ஆனவர்கள் எங்கள் பிரச்சனையை ஒருபோதும் கேட்கவில்லை கண்டுகொள்ளவும் இல்லை, எனவே அவர்களை பதவியில் இருந்து நீக்குங்கள். திருமாவளனுக்கு எதிராக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன், திருமாவளவனை ஒருபோதும் விட்டு விடமாட்டோம். அவருடன் தான் இருப்போம். நான் திமுக விற்கு எதிராக பேசவில்லை அனைத்துக் கட்சிக்கு எதிராக பேசுகிறேன். அனைத்துக் கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள் என ரஞ்சித் கூறினார்.

தலித் மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பியவர், சமூக நீதியை பின்பற்றும் திமுகவிற்கு ஒரு வேண்டுகோள் ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னையில் மணி மண்டபம் கட்ட திமுக அரசு அனுமதிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நீங்கள் நினைக்காதீர்கள் இது ஒரு எச்சரிக்கை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என ரஞ்சித் ஆவேசமாக தெரிவித்தார். 

click me!