சேலம் மாவட்டத்தில் நகைக்கடை உரிமையாளரிடம் நெருக்கமாகப் பழகுவது போல் பழகி அவரிடம் நகை, பணத்தை மோசடி செய்த இளம் பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில், சேலம் மாவட்டம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த நபர் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சேலம் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த மோகனா என்ற பெண் நகை வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் எண்களைப் பகிர்ந்து கொண்ட நிலையில் அவ்வபோது நகைகளின் விலையை கேட்பது போல் மோகனா நகைக்கடை உரிமையாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.
இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிதததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது வீட்டில் நடைபெற உள்ள விசேஷத்திற்கு 15 சவரன் நகை தேவைப்படுகிறது. அது தொடர்பாக தங்களிடம் பேச வேண்டும் என்று கடை உரிமையாளரை மோகனா அழைத்துள்ளார். அதன் அடிப்படையில் நகைக்கடை உரிமையாளரும் கோட்டகவுண்டம்பட்டியில் உள்ள அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
undefined
மருமகளின் நடத்தை யில் சந்தேகம்; 3 மாத பெண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த பாட்டி
அப்போது இருவரும் தனிமையில் இருந்த நிலையில், திடீரென வீட்டிற்குள் வந்த வாலிபர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் என் மனைவியை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கிறாயா என்று கூறி கடுமையாக தாக்க உள்ளார். மேலும் நகைக்கடை உரிமையாளர் அணிந்திருந்த 2.5 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு அவரை அங்கிருந்து அனுப்பி உள்ளார். மேலும் இருவரும் தனிமையில் இருப்பது போன்ற புகைப்படத்தை காண்பித்து அவ்வபோது பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இடஒதுக்கீட்டுக்காக தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்; ராமதாஸ் எச்சரிக்கை
இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த வாலிபர் அவரது கணவரே கிடையாது என்பதும், பணம் பறிக்கும் நோக்கில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டதையும் அப்பெண் ஒப்புக் கொண்டார். இனைத் தொடர்ந்து இளம்பெண் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.