அரியலூர் மாவட்டத்தில் மருமகளின் நடத்தையில் சந்தேகமடைந்த பாட்டி தனது பேத்தியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா, சந்தியா தம்பதியர். இவர்களுக்கு 2 வயதில் மகனும், 3 மாத பெண் குழந்தையும் இருந்தனர். இதனிடையே சந்தியா கருவுற்றிருந்த நிலையில் ராஜா வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ராஜா வெளிநாட்டில் இருந்த போது தான் சந்தியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இடஒதுக்கீட்டுக்காக தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்; ராமதாஸ் எச்சரிக்கை
undefined
இந்நிலையில் சந்தியா தனது 2 வயது மகன் மற்றும் 3 மாத பெண் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அருகில் உள்ள பண்ணைக்கு பால் ஊற்றுவதற்காகச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பெண் குழந்தை வாயில் மண்ணுடன் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தியா குழந்தையை தூக்கிக் கொண்டு பெண்ணாடம் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி சசிகலாவிடம் நேரில் சென்று வாழ்த்து பெறுவார் - ராஜன் செல்லப்பா
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், தனது மாமியார் விருத்தம்பாள் எனக்கு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து எனது நடத்தையில் சந்தேகம் அடைந்து சண்டையிட்டு வந்ததாகவும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் விருத்தம்பாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தையின் வாயில் மண்ணை போட்டு குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.