
Minister KN Nehru says there is nothing wrong with Kamal speech : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் "தக் லைஃப்" இந்த படத்தை இயக்குனர் மனிரத்தினம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வருகிற 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதற்காக திரைப்பட குழுவினர் பல மாநிலங்களுக்கு சென்று படத்தை புரோமோஷன் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் கர்நாடகம் சென்றிருந்த போது நிகழ்ச்சியில் பேசிய கமல் தமிழ் மொழியில் இருந்து கன்னடம் வந்ததாக தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டது.
"தக் லைஃப்" திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடவும் தடை விதித்ததனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே திரைப்படத்தை வெளியிடுவோம் எனவும் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கமல் நீதிமன்றத்தில் முறையிட்டார். அப்போது நீதிபதியும் கமலுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க அறிவுறுத்தியது. மேலும் கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல் கூறியுள்ளார். அவர் வரலாற்று ஆய்வாளரா? கன்னட மக்களின் மனம் புண்படுகிறது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் மனு பரிசீலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் கமல் தரப்போ எதுவும் தவறாக பேசாத நிலையில் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
மேலும் கர்நாடகாவில் "தக் லைஃப்" திரைப்படம் வெளியீட்டையும் ஒத்திவைத்தார். இந்த நிலையில் கமலுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரம் பாஜக மூத்த தலைவர் தமிழிசை கமல் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக மூத்த அமைச்சர் கே.என் நேருவிடம் கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழிசை கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பிய போது, அவங்க சொல்லுவாங்க.... யாரும் கமல் மன்னிப்பு கேட்டதை விரும்பவில்லை. அவர் சொன்னதில் என்ன தவறு உள்ளது. தமிழ் மொழியில் இருந்து தான் அனைத்தும் வந்தது தெலுங்கு, மலையாளம், எல்லாம் தமிழில் இருந்து வந்தது அவர் சொன்னதில் எதுவும் தப்பில்லை என தெரிவித்தார்.