அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு மார்ச் 22ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

By Manikanda Prabu  |  First Published Mar 8, 2024, 6:50 PM IST

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை வருகிற 22ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது


அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான  சொத்து குவிப்பு வழக்கில், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மற்றும் அமலாக்கதுறை தரப்பு வழக்கறிஞர் என இரு தரப்பினரும் வழக்கு விசாரணைக்கு இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாததை தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற  மார்ச் 22ஆம் தேதிக்கு தள்ளி  வைத்து மாவட்ட நீதிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

Latest Videos

இந்த வழக்கு மீதான விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா  ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின்  பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வருகிறார். இவ்வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறை மனு செய்துள்ளது இதன் காரணமாக இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளாது.

மணிப்பூரில் ராணுவ அதிகாரி கடத்தல்: வன்முறை தொடங்கியதில் இருந்து 4ஆவது சம்பவம்!

இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான  சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி செல்வம் இன்று விடுப்பில் சென்றுள்ளதால் மாவட்ட நீதிபதி பொறுப்பு சாமிநாதன் வழக்கை விசாரணை செய்தார்.

வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் என இரு தரப்பினரும் ஆஜராகததால், வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

click me!