தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வங்கிகள்; பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை - சத்ய பிரதா சாகு

By Velmurugan s  |  First Published Mar 8, 2024, 5:06 PM IST

தேர்தலில் வாக்காளர்களுக்கு முறைகேடாக பணம் கொடுப்பதை தடுக்க வங்கிகள் கண்காணிக்கப்படும் என மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுடன் மாநிலத் தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாராளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல்  அலுவலர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளன. கோவையில் பாதுகாப்பு பணியில் ஏற்கனவே 3 துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

சிறையில் இருந்தபடியே கால்பந்து போட்டிக்கு முதல் பரிசு வழங்கும் செந்தில் பாலாஜி? கரூரில் வைக்கப்பட்டுள்ள பேனரால் சர்ச்சை

Tap to resize

Latest Videos

தேர்தலில் முறைகேடாக பண பட்டுவாடா செய்வதை தடுக்க, வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதிகமாக பணம் வரவு வைக்கப்பட்டாலும், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டாலும் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின் போது பணம் கொடுப்பது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டால், அவற்றை பொதுமக்களே நேரடியாக புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலி உள்ளதாக கூறினார்.

“முதல்வர் ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னீசியா” - அண்ணாமலை விமர்சனம்

செயலியில் புகார் பதிவிடப்பட்ட 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் வயோதிகர்கள் இந்த தேர்தலில் சிரமம் இல்லாமல் வாக்களிக்க சக்சம்  என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க, தேர்தல் அதிகாரி வீட்டிற்கு சென்று நேரடியாக வாக்குகளை பெற முடியும் என தெரிவித்தார்.

click me!