சிறையில் இருந்தபடியே கால்பந்து போட்டிக்கு பரிசு வழங்கும் செந்தில் பாலாஜி? கரூரில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சை பேனர

By Velmurugan sFirst Published Mar 8, 2024, 4:34 PM IST
Highlights

சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கால் பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசை வழங்குவார் என கரூரில் வைக்கப்பட்டுள்ள பேனரால் சர்ச்சை.

கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் "மேட்ரிக்ஸ் கப் 2024" என்ற தலைப்பில் கால்பந்து போட்டி வருகின்ற 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொங்குமண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் - அண்ணாமலை உறுதி

முதல் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், நான்காவது பரிசாக 5000 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பரிசான 40 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை வழங்குபவர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி என்ற தகவலுடன் கரூர் மாநகரில் பிளக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

புதுவையில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை; போலீசார் தடியடி

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கால்பந்து போட்டி ஒன்றுக்கு முதல் பரிசு வழங்குவதாக வைக்கப்பட்டுள்ள பேனரால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. போட்டிக்கு முன்னதாக அவர் சிறையில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளதா? அல்லது சிறையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி பரிசு வழங்குவார் என்ற எண்ணத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளதா என பேனரை பார்ப்பவர்கள் கேள்வி எழுப்பிச் செல்கின்றனர்.

click me!