காவிரியில் வெள்ளம்.. மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைவு.. 1.75 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்..

By Thanalakshmi VFirst Published Oct 18, 2022, 10:58 AM IST
Highlights

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளால், மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைந்துள்ளது. அதன்படி இன்று காலை நிலவரப்படி, அணையில் நீர் வரத்து 1.75 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.
 

கடந்த ஒரு வாரமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து வினாடிக்கு 1.95 லட்சம் கன அடியாக அதிகரித்து. அணை முழுகொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. 

மேலும் படிக்க:நவ.3 அன்று தமிழகம் முழுவதும் போராட்டம்... அறிவித்தது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!!

இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.75 லட்சம் கன அடியாக குறைந்தது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

மேலும் படிக்க:Chennai Power Shutdown: சென்னையில் இன்று முக்கிய ஏரியாக்களில் 5 மணி நேரம் மின்தடை..!

அணையில் நீர்வரத்து 1.95 லட்சம் கன அடியிலிருந்து 1.75 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது. அதுபோல், நீர் வெளியேற்றம் 1.75 லட்சம் கன அடியாக குறைந்தது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும்,  16 கண் மதகு வழியாக வினாடிக்கு 1,53,500 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

click me!