பயணிகளே அலர்ட்..முழு ஊரடங்கில் மெட்ரோ செயல்படுமா.? ரயில் சேவை நேரம் மாற்றியமைத்து புது அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Jan 5, 2022, 8:07 PM IST
Highlights

சென்னை மெட்ரோ இரயில் சேவை வரும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அன்று இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து மெட்ரோ இரயில் சேவை நேரம் மாற்றமைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காலை  05.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவுறுத்தல்களின் படி  கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த மெட்ரொ இரயில் சேவைகள் நாளை முதல் 06.01.2022 வார நாட்களில் (திங்கள்கிழவம முதல் சனிக்கிழவம வரை) காலை 05.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயக்கப்படும். நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்படும்.

அனைத்து முனையங்களிலிருந்தும் கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 9 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணிக்கு முனையத்தை வந்தடையும். கூடுதலாக சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 09.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிப்புகளும் கட்டுப்பாடுகளும் வெளியானது. அதன்படி, மாநிலம் முழுவதும் நாளை (6.1.2022) முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது.  

மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால  நலன் மற்றும் தடுப்பூசி  செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது பேருந்துகள் மற்றும் புறநகர் இரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது. அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுபாடுகளும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

click me!