"வெல்டன் சகாயம்" - மாற்றி யோசிக்க வைக்கும் மார்கண்டேய கட்ஜூ...

First Published May 23, 2017, 4:34 PM IST
Highlights
markandeya katju appreciates sagayam ips


தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என போரிட்டு வருகின்றனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஐ.ஏஎஸ் அதிகாரி சகாயத்தை உள்ளே இழுத்து விட்டுள்ளார்.

தமிழக அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து அவ்வபோது விமர்சித்து வருபவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்து தொடர்ந்து தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

அன்று தொடங்கி இன்று வரை பல கருத்துகளை தனது சமூக வலைதளங்களில் சாட்டையடி பதிவுகளைப் போட்டு அனைவரையும் வியக்கவைத்து வருகிறார்.

சமீபத்தில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அஹ்டில், ரஜினிக்கு ஏன் முதல்வர் ஆசை இருக்கிறது. நாட்டில் இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி பற்றியெல்லாம் ரஜினியிடம் தீர்வு இருக்கிறதா? இருக்காது. அமிதாப் பச்சன் போன்று, ரஜினி மண்டையிலும் ஒன்றும் கிடையாது' என துணிச்சலாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் லஞ்சம் வாங்காத ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயத்தைப் பற்றி, சமீபத்தில் இவர் வெளியிட்ட பதிவு இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதில், 'வெல்டன் சகாயம்' என கருத்து தெரிவித்திருந்தார். மேலும் அவரது விக்கிபீடியா பக்கத்தையும் சேர் செய்திருந்தார்.

மார்க்கண்டேய கட்ஜுவின் பதிவு,  சகாயம் அரசியலுக்கு வந்தால் தமிழகம் காப்பற்றப்படும் எனவும், இளைஞர்களை மாற்று அரசியல் பார்வையை நோக்கி, தூண்டும் விதமாகவும் இருப்பதாக நெட்டிசங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

click me!