மேலும் வலுவான ‘மஹா’ புயல் ….தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குது ! இந்த மாவட்ட ஸ்கூலுக்குகெல்லாம் லீவு விட்டாச்சு !!

By Selvanayagam PFirst Published Oct 31, 2019, 7:42 AM IST
Highlights

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி அருகே ‘மஹா’ புயல் உருவாகி இருப்பதால் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் அணை, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.  ராமநாபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கொடைக்கானல், நீலகிரி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில தாலுகார்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்தது வரும் தொடர் மழை காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட பள்ளிளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


தொடர் மழையால், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழையை அடுத்து ஊட்டி, குந்தா, குன்னூர் , கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்க இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடாது பெய்து வரும் மழையை அடுத்து, கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் தாலுகாக்களான பன்றிமலை, ஆடலூர் பள்ளிகளுக்கும் விடுமுறை. கனமழை காரணமாக கொடைக்கானல் சுற்றுலாதலங்களும் மூடப்பட்டுள்ளது.சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!