மகளிர் உரிமைத்தொகை.. வங்கிக்கணக்கில் ரூ.1000 பணம் வந்துவிட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

Published : Sep 15, 2023, 09:59 AM ISTUpdated : Sep 15, 2023, 10:00 AM IST
மகளிர் உரிமைத்தொகை.. வங்கிக்கணக்கில் ரூ.1000 பணம் வந்துவிட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

சுருக்கம்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதற்கான எஸ்.எம்.எஸ் வரும் 18-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளார். பெண்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெற உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் மாதம் ரூ.1000 உரிமை தொகையை பெற உள்ளனர்.

எனினும் ஒரே நாளில் அனைவருக்கும் பணம் அனுப்ப முடியாது என்பதால் நேற்றய தினமே பணம் அனுப்பும் பணி தொடங்கியது. முன்னதாக ரூ.1 செலுத்தி பரிசோதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிலருக்கு பணம் அனுப்பப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 5 நாட்களில், அதாவது செப்டம்பர் 20-ம் தேதிக்குள் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதற்கான எஸ்.எம்.எஸ் வரும் 18-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் ஏற்கப்படாத சூழலில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ் பெறப்பட்ட 30 நாட்களுக்கு இணைய சேவை வாயிலாக கோட்டாட்சியர்க்கு விண்ணப்பிக்கலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மகளிர் உரிமை தொகை விண்ணப்பித்து கிடைக்கவில்லையா? கவலைப்படாதீங்க.. இதை மட்டும் செய்தால் போதும்.!

சரி, மகளிர் உரிமைத் தொகை ஒருவரின் வங்கிக்கணக்கில் வந்துவிட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து பார்க்கலாம். விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு மகளிர் உரிமை தொகை குறித்த ஸ்டேட்டஸ் குறித்த எஸ்.எம்.எஸ் அரசு தரப்பில் இருந்து அனுப்பப்படும். இருப்பினும் பணம் வங்கிக்கணக்கில் வந்துவிட்டது என்பதை வங்கியில் இருந்து வரும் பேலன்ஸ் எஸ்.எம்.எஸ் தான் உறுதி செய்யும்.

வங்கிக்கணக்கில் பணம் வந்துவிட்டதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

  • இந்தியன் பேங்க் வாடிக்கையாளர்கள் 092895 92895 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் வங்கிக்கணக்கு பேலன்ஸ் விவரங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும்.
  • ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 022 30256767 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்
  • கனரா பேங்க வாடிக்கையாளர்கள் 092892 92892 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் வரும்
  • பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வாடிக்கையாளர்கள் 092222 81818 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்த பேங்க் பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்.
  • பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்கள் 084680 01111 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

இதே போல் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பம் அளித்தவர்கள் தங்களின் வங்கி பேலன்ஸ் விவர எண்களை பயன்படுத்தி பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ளலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!