மகளிர் உரிமை தொகை விண்ணப்பித்து கிடைக்கவில்லையா? கவலைப்படாதீங்க.. இதை மட்டும் செய்தால் போதும்.!
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் இன்று தொடங்க உள்ளது. இந்த திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இந்த இரண்டு கட்டங்களிலும் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 18 முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
இந்த இரண்டு கட்டங்களிலும் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 18 முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும், அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வருகிற 18ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
அதேசமயம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. மகளிர் உரிமை தொகை விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். மீண்டும் விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.