அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்.. நாளை முதல் பணிகள் தொடக்கம்.. அமைச்சர் தகவல்..

By Thanalakshmi VFirst Published Sep 18, 2022, 1:54 PM IST
Highlights

மதுரை அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிகட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நாளை முதல் தொடங்கப்படும் என்றும் 2024ல் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் செயல்பட தொடங்கும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமையவிருக்கும் பகுதியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டிகளை நடத்தவும், ஜல்லிக்கட்டு நிகழ்வினை போற்றும் விதமாக அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்

அதன்படி, ஜல்லிக்கட்டு மைதானம் அழைக்க அலங்காநல்லூர் அருகே இரு இடங்களை பார்வையிட்டதில், கீழக்கரை கிராமத்தில் உள்ள இடத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க தேர்வு செய்துள்ளதாக கூறினார்.  மலைபுறம் உள்ள அரசு இடத்தில் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த அமைச்சர், 65 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க:பண்ருட்டி ராமசந்திரன் அரசியலுக்கு வந்த போது, டவுசர் அணிந்து பள்ளிக்கூடம் சென்றவர் இபிஎஸ்- கோவை செல்வராஜ்

மேலும் விரைவில் இதற்கான திட்ட மதிப்பீடு செய்யபடும். மண் பரிசோதனை செய்யப்பட்டு, சுற்றுசுவர் முதலில் கட்ட உள்ளதாகவும் அதன்பின்னர் முறையாக பெண்டர் விடப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார். விளையாட்டு வீரர்கள் இப்பகுதியிலுள்ள குளத்தினை பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 

நாளை முதல் மைதானத்தில் அளவிடும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் 18 மாதங்களில் ஜல்லிக்கட்டு மைதானத்தை கட்டி முடிக்க நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டிற்கு காளைகளை கொண்டு வருவதில் எந்த இடையூறும் இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு, வாடிப்பட்டியில் இருந்து சிட்டம்பட்டி வரை உள்ள நான்குவழிச்சாலை, தற்போது அமையவுள்ள மைதானத்திலிருந்து சுமார் 3 கி.மீ.நீளத்திற்கு இணைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். 

மேலும் படிக்க:சிறுவர்கள் மீதான சாதி தீண்டாமை.. குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை.. தென்மண்டல ஐ.ஜி உத்தரவு..

வரும் 2024 ஆண்டுக்குள் இந்த மைதானம் கட்டி முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலைட்யில், அதற்குள் ஜல்லிக்கட்டு பணிகள் முடிந்து திறக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். நிதிகள் ஒதுக்கப்பட்டு, கிராம சாலைகளை விரைவில் சீர்செய்யப்படும். சாலை அமைக்கும் பணியில் குறைபாடுகள் இருந்தால் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

click me!