
ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம்
திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக உறுப்பினருமான ஆ.ராசாவின் பேச்சுக்கள் அதிகம் பொதுமக்களால் கவரப்படும், அதே நேரத்தில் அவரது பேச்சுக்கள் பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியும் உள்ளது. அந்தவகையில் இந்துக்கள் தொடர்பாக ஆ.ராசா பேசியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என பேசியது போல் காட்சி வெளியானது.
இந்து அமைப்புகள் போராட்டம்
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆ.ராசாவை கைது செய்ய கோரி காவல்நிலையித்தில் பாஜக மற்றும் இந்து முன்னனி அமைப்பினர் புகார் மனு கொடுத்து வருகின்றர். அதிமுகவினரோ ஆ.ராசாவின் உருவப்படத்தை எரித்து தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். இன்று மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள ஜான்சிராணி பூங்கா அருகே நேதாஜி சிலை முன்பு இந்து முன்னணியினர் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசாவை கைது செய்ய வழியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இந்து பரிவார் இயக்கங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது ஆ.ராசாவின் உருவப்படத்தை கிழித்து எரிந்து தங்களை எதிர்ப்புகளை இந்து அமைப்பினர் பதிவு செய்தனர்.
இதையும் படியுங்கள்