தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. பள்ளிகளுக்கு விடுமுறை..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..

By Thanalakshmi V  |  First Published Sep 18, 2022, 11:51 AM IST

தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
 


தமிழகத்தில் H1N1 எனப்படும் பன்றிக் காயச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றன. இந்த வகை காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் தாக்கி வருகிறது. உடல் சோர்வு, சளி, இருமல் போன்றவை அறிகுறிகளாக உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பினால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பில் வழிகின்றன. இந்த சூழலில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றன.

காய்ச்சல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 25 ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:அதிர்ச்சி.. சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் வெளிவந்த தகவல்

மேலும் பேசிய அவர், அக்டோபர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் தகுதியுள்ள அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுவரை தமிழகத்தில் 1,044 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்று கூறிய அமைச்சர், பருவகாலத்தில் வரும் காய்ச்சல் என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்று உறுதியளித்தார். மேலும் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க:உதயநிதி செங்கலை தூக்கி காண்பித்த ராசி..! செங்கல், ஜல்லி பொருட்கள் விலை உயர்ந்து விட்டது- செல்லூர் ராஜூ

சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தாலோ அல்லது காய்ச்சல் பாதிப்பு இருந்தாலோ பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கலாம் என்று அவர் தெரிவித்தார். அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் வாரந்தோறு புதன்கிழமை கொரோனா தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டம் தொடருமா என்பது விரைவில் தெரியவரும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறினார்.
 

click me!