தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிக்கும் உயர் நீதிமன்றம்

Published : Aug 22, 2023, 09:11 PM ISTUpdated : Aug 22, 2023, 09:54 PM IST
தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிக்கும் உயர் நீதிமன்றம்

சுருக்கம்

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்மையில் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கையும் மறு ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் முன்வந்திருக்கும் நிலையில் மூன்று அமைச்சர்கள் மீதான வழக்குகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொன்முடி வழக்கை மறு ஆய்வு செய்வதற்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தான் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீதான வழக்குகளையும் மறு விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்.

மாத்திரை வாங்கும்போது இதை கவனிச்சீங்களா? நடுநடுவே இடைவெளி இருப்பதற்குக் என்ன காரணம் தெரியுமா?

கடந்த வாரம் பொன்முடி மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் விசாரணை முடியும் தருவாயில் வழக்கு வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது எனவும் இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணை தான் பார்த்ததிலேயே மிக மோசமானது என்றும் நீதிபதி கூறினார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக இருக்கிறார். இவர் 2006 முதல் 2011 வரையான திமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு மேல் சொத்துக்களச் வாங்கிக் குவித்ததாக 2012ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, மற்றும் தொழிலதிபர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீதான இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்தது.

இந்த வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டதால், அமைச்சர் உள்பட மூவரையும் விடுதலை செய்வதாக கடந்த ஜூலை 20ஆம் தேதி ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆபாசத்தைத் தடுக்க புதிய ஆயுதம்! சமூக ஊடகங்கள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு மத்திய அரசின் கிடுக்கிப்பிடி!

தங்கம் தென்னரசு வழக்கு

தமிழக நிதி அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு, 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவர் மனைவி மணிமேகலை மீதும் 2012ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை கிட்டதட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னையும் தன் மனைவியையும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி ஶ்ரீவில்லிப்புத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலையை  விடுவித்து தீர்ப்பு வழங்கினார். 

நெருப்புடா... நெருங்குடா பாப்போம்! பயிற்சி முடிந்து ராணுவப் படைகளில் இணையும் 19,000 அக்னி வீரர்கள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Onion Price: தாறு மாறா குறையப்போகும் வெங்காயம் விலை! மூட்டை மூட்டையாய் வாங்கிச்செல்ல நேரம் வந்தாச்சு.! என்ன காரணம் தெரியுமா?
Sugar Hoarding Law: 100 கிலோ சர்க்கரையை வீட்டில் வைத்தால் தண்டனையா? சட்டம் என்ன சொல்கிறது?