கடந்த 3 மக்களவை தேர்தல்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வாக்கு சதவீதம் பதிவானது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
2024 மக்களவை தேர்தல் இன்று முதல் ஜூன் 1 வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக தொடங்கி உள்ளது. இந்த தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு தேர்தலில் வாக்குரிமை பெற்ற அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் 70% முதல் 80% வரை வாக்கு சதவீதம் பதிவாகி வருகிறது.
100% வாக்குப்பதிவை மையப்படுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த 3 மக்களவை தேர்தல்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வாக்கு சதவீதம் பதிவானது என்று இந்த பதிவில் பார்க்கலாம். அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 73.02% வாக்குகள் பதிவானது.
Actor Vijay: நடிகர் விஜய் வாக்களிக்க வருவதில் சிக்கல்? என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்.!
கடந்த 2014 மக்களவை தேர்தலில் 73.74% வாக்குகள் பதிவானது. கடந்த 2019 தேர்தலில் 72.47% வாக்குகள் பதிவானது.
அதே போல் கடந்த 3 மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் எத்தனை சதவீதம் வாக்கு பதிவானது என்று பார்க்கலாம். அதன்படி கடந்த 2009 மக்களவை தேர்தலில் 67.40% வாக்குகள் பதிவானது, கடந்த 2014 மக்களவை தேர்தலில் 66.44% வாக்குகளும், கடந்த 2019 மக்களவை தேர்தலில் 58.21% வாக்குகளும் பதிவானது.