இன்று தேர்தல் நடைபெறவுள்ள 102 தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
இந்தியாவின் பிரமதரை தேர்ந்தெடுப்பதற்கான மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளில் வாக்கப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குசாவடி உள்ள நிலையில் 44800வாக்கு சாவடிகளில் வெப் கேமரா மூலமாக முழுவதும் கண்காணிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் 6 கோடியே 21 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். இதனிடையே இந்தியாவில் வாக்குப்பதிவின் சதவிகிதம் 70 முதல் 75 சதவிகிதிகம் மட்டுமே உள்ளது. எனவே வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பல்வேறு விழிப்புணர்வுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.…
— Narendra Modi (@narendramodi)
வாக்கு சதவிகிதம் அதிகரிக்கனும்
இந்தநிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், 2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது! என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.