தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் தொடங்கியது.. காலையிலேயே வாக்களித்த அரசியல் தலைவர்கள்.!

By vinoth kumarFirst Published Apr 19, 2024, 7:27 AM IST
Highlights

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடத்தப்படுகிறது. 

இதையும் படிங்க: Breaking: தமிழகத்திலேயே முதல் ஆளாக வந்து வாக்களித்தார் நடிகர் அஜித்!

தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வாக்காளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி, பெண் வாக்காளர்கள் 3.17 கோடி, மற்றவர்கள் 8,467 என மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: தேர்தலில் இன்று களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்.? முன்னாள் முதலமைச்சர்கள்,ஆளுநர், மத்திய அமைச்சர்கள் யார்?

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பிற்பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருவதால் காலையிலேயே  வாக்குப்பதிவு செய்ய ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றனர். சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வாக்களித்தார். அதேபோல், சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட கண்டனூர் வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.

click me!