தேர்தலில் இன்று களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்.? முன்னாள் முதலமைச்சர்கள்,ஆளுநர், மத்திய அமைச்சர்கள் யார்?

By Ajmal Khan  |  First Published Apr 19, 2024, 7:29 AM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ள நிலையில், இன்றைய தேர்தலில் 3 முன்னாள் முதலமைச்சர்கள், 8 மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஆளுநர் ஒருவரும் களம் இறங்குகின்றனர். 
 


வாக்குப்பதிவு தொடங்கியது

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்கிற மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இன்று தமிழகத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குசாவடி உள்ள நிலையில் 44800வாக்கு சாவடிகளில் வெப் கேமரா மூலமாக முழுவதும் கண்காணிக்கப்படவுள்ளது. தமிழகந்த்தில் 6 கோடியே 21 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். இந்த நிலையில் இன்றைய தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நட்சத்திர வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள்

அதன் படி தமிழகத்தில் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த நிர்வாகியுமான தமிழிசை சவுந்திரராஜன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான அ .ராசாவை எதிர்கொள்கிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் தேனி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.  புதுவையில் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எம்பியுமான வைத்தியலிங்கம், தற்போதைய மாநில அமைச்சர் நமச்சிவாயத்தை எதிர்கொள்கிறார். 

மத்திய அமைச்சர்கள் யார்.?

மத்திய அமைச்சர்களும் இதே போல மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியிலும்,மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அருணாச்சல மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் . இதே தொகுதியில் கிரண் ரிஜிஜுவை எதிர்த்து அருணாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மாநில காங்கிரஸின் தலைவருமான நபம் துகி களமிறங்கியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் தொகுதியில், மத்திய அமைச்சர் சஞ்சீவ் பலியன் போட்டியிடுகிரார்.  

நீர்வழித் துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சர்பனாதா சோனோவால் , அசாமில் உள்ள திப்ருகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர்  ஜிதேந்திர சிங் , உதம்பூரில் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர்பூபேந்திர யாதவ், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தின் மத்ஸ்யா தொகுதியில் களம் காண்கிறார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ராஜஸ்தான் மாநிலம் பிகானர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

நைட்டோடு நைட்டாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்.. ஐஜேகே-வினரை சுத்துப்போட்ட தேர்தல் பறக்கும் படை!

click me!