School College Re-opening News: அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. முக்கிய அறிவிப்பு..முழு விவரம்..

By Thanalakshmi VFirst Published Jan 27, 2022, 8:09 PM IST
Highlights

பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதியளிக்கபட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகளை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.அதே போல் பிப்.,1 ஆம் தேதி முதல் அனைத்து பல்கலைகழகங்கள்,கல்லூரிகள்,தொழில் பயிற்சி மையங்கள், பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அரசியல், கலாச்சாரம், சமுதாய கூட்டங்கள் போன்ற நிகழ்வுகள் நடத்த தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள், கேளிக்கை மற்றும் பொழுதுப்போக்கு பூங்காக்கள் ஆகியவை 50% பேருடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை நிகழ்ச்சிகளுக்கும் தடை தொடர்கிறது. துணி, நகைகடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளருக்கு மிகாமல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திருமண சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 100 பேருக்கு மட்டுமே அனுமதி மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொருட்காட்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், அடுமனைகள்,தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி. தியேட்டர், யோகா நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள்,கேளிக்கை விடுதிகள், விளையாட்டுக்கள், உள் அரங்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் 50 % பேர் மட்டுமே அனுமதிப்பட வேண்டும் உள்ளிட்ட கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் பிப்ரவரி 10 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

click me!