பெரியாரை விமர்சித்து அதன் மூலம் அடிவாங்கி அனுதாப வாக்குகளை பெற சீமான் திட்டம்.! கொளத்தூர் மணி ஆவேசம்

Published : Feb 03, 2025, 06:48 AM IST
பெரியாரை விமர்சித்து அதன் மூலம் அடிவாங்கி அனுதாப வாக்குகளை பெற சீமான் திட்டம்.! கொளத்தூர் மணி ஆவேசம்

சுருக்கம்

 புதிய கல்விக் கொள்கை, ஆளுநரின் பல்கலைக்கழக வேந்தர் பதவி, சீமானின் பெரியார் குறித்தான விமர்சனம் குறித்து கொளத்தூர் மணி கடுமையாக விமர்சித்தார்.

புதிய கல்வி கொள்கை- தமிழகத்தில் புகுத்த நினைக்கும் பாஜக

திராவிடர் விடுதலை கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணா 56 ஆவது நினைவுநாள் முன்னிட்டு நிமிர்வோம் வாசகர் வட்டம் 26 ஆவது சந்திப்பு  நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் மணி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், புதிய கல்விக் கொள்கை  தமிழ்நாட்டில் பாஜக புகுத்த நினைக்கிறது அதனை தமிழ்நாடு ஏற்க மறுக்கிறது. தமிழ்நாட்டின் அரசின் வரிப்பணத்தில் மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் பல்கலைக்கழகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராக இப்படிப்பட்ட முயற்சிகள் எடுப்பதற்கான காரணம் ஆளுநர் பல்கலைக்கழகத்திற்கு வேந்தராக  இருப்பது தான் 

மாநிலங்களுக்கு மானியம் இல்லை

அண்டை மாநிலம் கர்நாடகத்தில் இருப்பதைப் போல பிரதமர் மோடி மாநிலமான குஜராத்தில் இருப்பதைப் போல கல்வி அமைச்சரே வேந்தர் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பல்கலைக்கழக மானிய குழு பல வழிகாட்டு நெறிமுறைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் பல வகையில் அது நமக்கு எதிரானதாக அமைந்திருக்கிறது. அந்த கல்வி முறையை பின்பற்றாத மாநிலங்களுக்கு மானியம் கூட இல்லை என்பதைப் போல செய்திகளை இணைத்து வழங்கி இருக்கிற ஒன்றிய அரசை எதிர்ப்பதும் இந்த நடவடிக்கைகள் மீது அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

அடி வாங்கி அனுதாப தேடும் சீமான்

பெரியார் குறித்து சீமான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பேசுவதற்கு காரணம் இதனால்  வன்முறை ஏற்பட்டு தாக்குதல் நடந்தால் அதன் மூலம் அனுதாப வாக்குகள் கிடைக்குமா என்ற ஆசையில் அவர் செய்கிறார் என நினைக்கிறேன்.  தேர்தல் முடிந்த பிறகு அந்த அனுதாபம் கிடைக்கலாமே தவிர அதற்கு முன்னால் கிடைக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தலுக்கு முன்னால் அடித்தால் அவை வாக்குகளாக மாறும் என அவர் நினைக்கிறார் .

அது தேர்தலுக்கு பின்னால் நடக்கும் என எதிர்பார்க்கிறேன். தங்களது எஜமானர்களான குருமூர்த்தியும் கோபால்ஜியையும் சீமான் சந்திப்பதாக அவருடன் இருந்த ஜெகதீச பாண்டியன் கூறியிருக்கிறார். அந்த எஜமானர்களின் கட்டளையை வாலை ஆட்டிக் கொண்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார் அதுதான் பெரியார் மீதான அவரது விமர்சனம் என கொளத்தூர் மணி தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!