5வது லிஸ்ட்டை வெளியிட்ட விஜய்! த.வெ.க.வில் மேலும் 19 மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு!

Published : Feb 02, 2025, 08:37 PM ISTUpdated : Feb 02, 2025, 08:41 PM IST
5வது லிஸ்ட்டை வெளியிட்ட விஜய்! த.வெ.க.வில் மேலும் 19 மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு!

சுருக்கம்

TVK Vijay latest news: தமிழக வெற்றிக் கழகத்தின் ஐந்தாம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஐந்தாம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 19 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகம் முதல் கட்டமாக 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்தது. நிர்வாக வசதிக்காக த.வெ.க. 120 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக விஜய் அறிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

இதன்படி கடந்த 24ஆம் தேதி முதல் நான்கு கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து த.வெ.க.வின் 5ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் ரூ.10 கோடி செலவில் நவீன சாரண சாரணியர் இயக்கத் தலைமையகம்: முதல்வர் அறிவிப்பு

"தமிழக வெற்றிக் கழகத்தில் ஐந்தாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&st=75kfq593&dl=0

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?: அமைச்சர் ரகுபதி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

த.வெ.க சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறபித்தனர்
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்