MK Stalin in Trichy: திருச்சியில் நடைபெற்ற பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். ரூ.10 கோடியில் நவீன சாரண சாரணியர் தலைமையகம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார். மக்கள் நலனில் அக்கறை கொண்டதால் பேடன் பவல் சாரணர் இயக்கத்தைத் தொடங்கினார் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் ரூ.10 கோடி செலவில் நவீன சாரண சாரணியர் தலைமையகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் இதனை அறிவித்தார்.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி மாநாடு தொடங்கியது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரண சாரணியர் இயக்கத்தினர் கலந்துகொண்டனர்.
வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?: அமைச்சர் ரகுபதி
இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக்க் கலந்துகொண்டார். விழாவில் பேசிய முதல்வர், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி என்று கூறினார்.
"மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று. நாட்டுப்பற்று என்பது நிலத்தின் மீதான பற்று என்பதைக் கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும்" என்று வலியுறுத்திய முதல்வர், மக்கள் நலனில் அக்கறை கொண்ட செயல்பாடுகளுக்காகவே ராணுவ வீரரான பேடன் பவல் சாரணர் இயக்கத்தைத் தொடங்கினார் என்றும் குறிப்பிட்டார்.
விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டில் ரூ.10 கோடி செலவில் சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமையகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
த.வெ.க 5ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியீடு