வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?: அமைச்சர் ரகுபதி

Published : Feb 02, 2025, 06:37 PM ISTUpdated : Feb 02, 2025, 07:02 PM IST
வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?: அமைச்சர் ரகுபதி

சுருக்கம்

Minister Raghupathi slams Edappadi Palaniswami: கிழக்குக் கடற்கரைச் சாலை வழக்கில் கைதானவர் அதிமுகவினர் எனத் தெரியவந்ததால், திமுக மீது பொய்ப் பழி சுமத்திய எடப்பாடி பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். வீராவேசமாக அறிக்கைவிட்ட எடப்பாடி பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"முகத்தை எங்கே வைத்துக் கொள்வார் எடப்பாடி பழனிசாமி? திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் மகளிர் முன்னேறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திமுக அரசின் மீது பழி போட முயற்சிப்பதும் சில நாட்களிலேயே உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக் கொள்ளும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.

ஹார்ட் அட்டாக் வருதவற்கு முன் தோன்றும் 8 அறிகுறிகள்!

திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்சோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது.

திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?"

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார்.

வேலை தேடும் இளைஞர்கள் செய்யக் கூடாத 5 தவறுகள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு