அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!

By vinoth kumar  |  First Published Dec 22, 2023, 12:21 PM IST

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் தாயார் ஆர்.அமராவதி அம்மாள் (94) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 


தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் (94) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்  அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன். அதிமுகவில் இருந்த போது 3 முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு திமுகவில் இணைந்தார். தற்போது திமுக அமைச்சரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் தாயார் ஆர்.அமராவதி அம்மாள் (94) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.. யார் யாருக்கு எவ்வளவு? இதோ முழு விவரம்.!

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- 'மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்‌ அவர்களின் தாயார் திருமதி. அமராவதி அம்மாள் அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைவெய்திய செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அன்பின் திருவுருவான அன்னையை இழந்து தவிக்கும் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்‌ அவர்களுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

click me!