இயற்கை சீற்றத்தில் தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் தமிழக அரசு 1லட்சத்து 19ஆயிரம் கோடி கேட்கப்பட்ட நிலையில், 5094 கோடி ரூபாய் மட்டுமே தமிழக அரசு வழங்கியதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை பாதித்த இயற்கை சீற்றம்
தமிழகத்தில் வட மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பல்வேறு மாவட்டங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை பெருவெள்ளம், கஜா, தானே, வர்தா என பல புயல்கள் தமிழகத்தை புரட்டி போட்டு உள்ளது. இந்த இயற்கை சீற்றத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
undefined
இந்த பாதிப்பில் இருந்து மக்களை மீட்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய தொகை கிடைக்கப்பெற்றதா இல்லையா என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக புள்ளி விவரங்கள் கூடிய பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்கும் வகையிலும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும்,
கேட்டது.? கொடுத்தது.?
தற்காலிக நிவாரணமாக 7959 கோடி ரூபாயும், நீண்ட கால சீரமைப்பு தொகையாக 17,952 கோடியென மொத்தமாக 25 ஆயிரத்து 912 கோடி கேட்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு 1737 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வார்தா புயலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளை சீரமைக்க 22573 கோடிகள் மத்திய அரசிடம் நிவாரண உதவியாக தமிழக அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு 266 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளது. இதனை எடுத்து கனமழை மற்றும் ஓகி புயல் பாதிப்பு தொடர்பாக 2018 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் தமிழக அரசு 9302 கோடி கேட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு 133 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது.
மத்திய அரசு கொடுத்த நிவாரண நிதி என்ன.?
நாகப்பட்டினம் தஞ்சாவூர் புதுக்கோட்டை என பல மாவட்டங்களில் புரட்டி போட்ட கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் வகையில் 17,899 கோடி ரூபாய் மத்திய அரசிடம் தமிழக அரசு கூறியது ஆனால் மத்திய அரசு 1146 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. இதனை எடுத்து நிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்க 3,758 கோடி ரூபாய் கேட்கப்பட்டதில் 63 கோடி மட்டுமே மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்தநிலையில் இதுவரை மத்திய அரசிடம் அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலத்தில் கேட்கப்பட்ட தொகையானது ஒரு லட்சத்து 19ஆயிரம் கோடி ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு வெள்ளம் மற்றும் புயல் பாதிப்பிற்காக வழங்கியது 5094 கோடி மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்