முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு.! வெளிநாட்டு நிபுணர்கள் குழு ஆய்வு வேண்டும் -கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்

By Ajmal KhanFirst Published Mar 17, 2023, 9:07 AM IST
Highlights

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து அணை பாதுகாப்பு சட்டம் 2021ன் கீழ் வரும் வழிகாட்டு நெறிமுறைகள் படி ஆய்வு நடத்த கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

முல்லைபெரியாறு அணை

முல்லைபெரியாறு அணை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளாவிற்கு இடையே தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு இல்லையென தொடர்ந்து கூறிவருகிறது. அதே நேரத்தில் 152 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு அணை பலமாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  முல்லை பெரியாறு அணை பகுதி என்பது நிலநடுக்க பாதிப்பு உள்ளாகும் பகுதியாக இருக்கிறது கடந்த 2020ஆம் ஆண்டு காலகட்டத்தில் 138 நில அதிர்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 

டிடிவி தினகரனோடு கைகோர்த்த ஓபிஎஸ் அணி..! தேனியில் ஒன்றினைந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

தொடர்ந்து ஏற்படும் நில அதிர்வு

மேலும் அணை 127 ஆண்டுகளுக்கு மேலானது என்பதால் அதன் உறுதி தன்மை என்பது கேள்விக்குறியானது, ஏற்கனவே கடந்த 2008 ஐ.ஐ.டி நிபுணர்கள ஆய்வில முல்லைபெரியாறு அணை மற்றுல் பேபி அணை நில நடுக்கம் ஏற்பட்டால் கடும் சேதம் அடையும் அபாயம் உள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த அணை உடைந்தால் இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், கோட்டயம், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்பையும், உயிர் சேதத்தையும் சந்திக்கும். மேலும் அணை நிலநடுக்கத்தை தாங்குமா, உறுதிதன்மை உள்ளிட்டவை தொடர்பான சோதனை கடந்த 2011ல் எடுக்கப்பட்டது எனவே 11 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மீண்டும் ஆய்வு நடத்தவேண்டும்.

சர்வசேத குழு ஆய்வு

குறிப்பாக சர்வதேச நிபுணர்கள் அடங்கிய ஒரு தன்னிச்சையான நிபுணத்துவம் பெற்ற அமைப்பு மூலம் அணையின் பாதுகாப்பு, உறுதி தன்மை உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும். மேலும் இரு மாநில பிரதிநிதிகள் முன்னிலையில் அணை தொடர்பான ஆய்வு நடத்தப்பட வேண்டும். அணை பாதுகாப்பு சட்டம் 2021ன் கீழ் வரும் வழிகாட்டு நெறிமுறைகள் படி முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூறிய அனைத்தும் ஏற்கனவே முல்லை பெரியாறுஅணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்திலும் கேரள அரசால் வலியுறுத்தப்பட்டதாகவும்  அதையே தற்போது நீதிமன்றத்தின் முன் வைப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

நீதிமன்றத்தில் சரண் அடைந்த அதிமுக மாஜி மந்திரி..! நிலத்தை மிரட்டி வாங்கிய வழக்கால் சிக்கல்

click me!