பிளாஸ்டிக் பயன்பாட்டால் மூங்கில் தொழில் பாதிப்பு; கைவினை கலைஞர்கள் வேதனை

By Velmurugan sFirst Published Mar 17, 2023, 8:52 AM IST
Highlights

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பினால் மூங்கில் தொழில் கடுமையாக பாதிப்படைவதாக மூங்கில் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், விவசாய சாகுபடி பணிகளில், மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்களை அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தன. விதை தூவுதல், அறுவடையின் போது விளைபொருட்களை சேகரித்தல், தானியங்களை சுத்தப்படுத்துதல் உட்பட அனைத்துப் பணிகளுக்கும், மூங்கில் கூடைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தக்காளி பழங்களை அடுக்கி சந்தைகளுக்கு எடுத்துச் செல்வார்கள். ஆயிரக்கணக்கில் தவிர்க்க முடியாத பயன்பாட்டில் இருந்தன. பின்னர், பிளாஸ்டிக் பெட்டிகள் வேளாண் அறுவடை பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்ட நிலையில் மக்காச்சோளம் மற்றும் இதர தானிய சாகுபடிகளிலும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 

இதனால், மூங்கில் கூடை பயன்பாடும், உற்பத்தியும் குறைந்து, தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், தொழிலாளர்கள், பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் தொழிலை கைவிடாமல், உற்பத்தி பொருளையும் மாற்றி, வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர். கூடைகள் தயாரிப்பில், மூலப்பொருள்கள் மூங்கில் கிடைப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது. 

வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்... ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!!

இருப்பினும், புதிய வகை பொருட்கள் தயாரிப்பால், தொழிலை கைவிடாமல், தொடர்கிறோம். கண்காட்சி மற்றும் இதர வணிக பகுதியில், மூங்கிலால் ஆன பொருட்களை விற்பனை செய்ய, அரசு எங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கினால், மிகுந்த பயனளிப்பதாகவும் விவசாயிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, மூங்கில் கூடைகளை பயன்படுத்தினால், எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்' என தெரிவித்துள்ளனர்.

click me!