Woman Arrested : என்னதான் உலகம் பிற்போக்காக சிந்திப்பதை விட்டுவிட்டு முன்னோக்கி நகர்ந்து வந்தாலும், அதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றனர் சிலர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பகீர் புகார் ஒன்றை முன் வைத்தார். அதில் "சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு லூலு தேவ ஜமீலா என்பவருடன் முகநூல் மூலம் அறிமுகமானேன். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த உடையார்விளை என்கின்ற இடத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அவர்.
Radical Feminism ஒரு நல்ல முற்போக்கான நபராக அவர் எனக்கு அறிமுகமானார், பெண்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பது போன்ற பல பதிவுகளை தனது முகநூலில் பதிவிட்டு, பெண்ணியம் போன்ற பல முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்பதை அவரது முகநூல் வழியாக அறிந்துகொண்டேன். ஒரு கட்டத்தில் இவ்வளவு முற்போக்காக சிந்திக்கும் இந்த பெண்ணை சந்தித்தே ஆக வேண்டும் என்று நினைத்து அவரை தொடர்புகொண்டேன்.
undefined
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அவரை சந்திக்க சென்றேன், அப்போது அவருடன் பவானி என்பவரும், இன்னும் சில பெண்களும், ஆண்களும் இருந்தனர். அப்போது தான் அவர்கள் ரகசியமாக இணைந்திருக்கும் ஒரு வாட்ஸாப் குழு பற்றி அறிந்தேன். அதிலும் இணைந்தேன், அதில் அடிக்கடி சில டாஸ்க்குகள் கொடுப்பார்கள். பெண்கள் தைரியமாக உள்ளாடை அல்லது ஆடையில்லாமல் போட்டோக்களை பதிவிட வேண்டும்.
மேலும் பெண்கள் யாருடன் இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதால் அவர்களின் உரிமை போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அந்த பவானி என்ற நபருக்கு இரவு நேரங்களில் எனக்கு வீடியோ செய்து ஒரு கட்டத்தில் மூளை சலவை செய்ய துவங்கினார். அவர்கள் வலையில் நான் சிக்கினேன். தன்னை ஓரின சேர்க்கையாளர் என்று குறிக்கொண்டு பவானி தனிமையில் என்னை அழைத்து படுக்கையில் நாங்கள் இருப்பது போன்ற வீடியோகளை எடுத்தார். நாளைடைவில் அது தொடர ஒரு கட்டத்தில் அவர்களின் உண்மை முகம் தெரிய துவங்கியது. என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள், தர முறுத்தால் எனது வீடியோகள் லீக் ஆகும் என்று மிரட்டினார், என் குடும்ப வாழ்க்கை மொத்தமும் இதனால் பாலானது என்று அவர் புகார் அளித்தார்.
திருச்சியில் வாலிபரை கதறவிட்ட ஓரினச்சேர்க்கை காம கொடூரன்கள்; 5 போதை ஆசாமிகள் அதிரடி கைது
அந்த சமயத்தில் தான் லுலு ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றுள்ளார், உடனே விமான நிலையங்களில் அவர் குறித்த தகவல்கள் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து திருவனந்தபுரம் வந்தபோது குடிவரவு அதிகாரிகள் அவரை தடுத்து அப்பகுதி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின் சென்னை கொண்டுவரப்பட்ட அவர் கடந்த டிசம்பர் 14ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, அவருக்கு இப்பொது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.