நாடாளுமன்ற திறப்பு விழா முறையாக நடத்தப்படவில்லை என்பதால், அந்த விழாவை புறக்கணித்துள்ளதாக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா பணி தற்போது நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28 ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தன. திமுகவும் விழாவில் பங்கேற்கவில்லையென அறிவித்தது. இந்தநிலையில் செ்ன்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட கனிமொழி விழாவில் பங்கேற்காதது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
undefined
முதலமைச்சர் வெளிநாடு பயணம்
சென்னை எழும்பூரில், சில்லறை விற்பனையாளர்கள், வர்த்தகர்களுடனான எதிர்காலத்திற்கான தீர்வுகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அதிக பெண்கள் இருந்தால் மகிழ்ச்சி எனவும், குறு, சிறு, நடுத்தரத்தொழில் துறை தேவையை உணர்ந்ததால் தமிழ்நாட்டில் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறினார். ஆயிரக்கணக்கான கோடிகள் திரும்பச்செலுத்தாத பெரு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடனாக அளிப்பதாகவும், அதே நேரம் குறு, சிறு தொழில்துறையினர் வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.
எதிர்கட்சிகள் புறக்கணிப்பு
அதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்றது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து சிறப்பு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த கனிமொழி, கோடிக்கணக்கான அளவிற்கு முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டுதான் உள்ளதாகவும், அது தெரிந்த பிறகும் அரசியல் செய்வதற்காக விமர்சனங்கள் வைக்கப்படுவதாக தெரிவித்தவர், இதற்கு பதில் சொல்லத் தேவையில்லை என்றார். மேலும் நாடாளுமன்ற திறப்பு விழா முறையாக நடத்தப்படவில்லை என்பதால் அதனை புறக்கணித்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்