UPSC தேர்வில் தமிழகத்தில் முதல் இடம் பெற்ற மாணவி ஜீஜீ யார்? சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர் சேகர்பாபு

By Raghupati R  |  First Published May 24, 2023, 1:14 PM IST

2022ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார் ஜீஜீ.


ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் முதலிய உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான சிவில் சர்வீச் தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளில் இந்த தேர்வு தேர்வு நடத்தப்படுகிறது.

Tap to resize

Latest Videos

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி, முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியானது. அடுத்த நிலையான நேர்காணல் கடந்த மே 18 ஆம் தேதி முடிவடைந்தது.

இதையும் படிங்க..யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் - யார் யார் தெரியுமா?

undefined

இந்நிலையில், இந்த யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. சென்னை பெரம்பூரைச் சேரந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். எலக்ட்ரீசியன் தொழில் செய்பவரின் மகளான இவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கல்லூரியில் படித்து வருகிறார்.

2022 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வை (UPSC-Civil Serivice) அவர் எழுதியுள்ளார். முதல் முயற்சியிலேயே சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவியை ஜீஜீயை நேரில் வாழ்த்தினார் அமைச்சர் சேகர் பாபு.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

click me!