வெயில் வாட்டி வதைக்கிறது..! மாணவர்களால் தாங்க முடியாது... பள்ளி திறப்பதை 15 நாட்கள் தள்ளி வையுங்க- சீமான்

Published : May 24, 2023, 01:12 PM IST
வெயில் வாட்டி வதைக்கிறது..! மாணவர்களால் தாங்க முடியாது... பள்ளி திறப்பதை  15 நாட்கள் தள்ளி வையுங்க- சீமான்

சுருக்கம்

மாணவ செல்வங்களின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பினை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் அதிகரிக்கும் வெயில்

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகிற 1 ஆம் தேதி 6 ஆம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களுக்கும், ஜூன் 5 ஆம் தேதி 1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. தாங்க முடியாத கடும் வெயில், மற்றும் கொரோனா தொற்றுப் பரவலும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக பள்ளிகளைத் திறந்து மாணவச்செல்வங்களை வாட்டி வதைக்க முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

இபிஎஸ் பானியில் நாங்கள் பேசத் தொடங்கினால் ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது!எச்சரிக்கும் தங்கம் தென்னரசு

கோடை வெயிலால் பாதிப்பு

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதல் மற்றும் மாறிவரும் பருவநிலை காரணமாக கோடை மற்றும் குளிர்காலங்கள் நிலவும் மாதங்களில் அண்மைக்காலமாக பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. கோடைக்காலம் நீண்டும், குளிர் மற்றும் மழைக்காலங்கள் குறைந்தும் வருவதோடு, கோடைக்காலத்தில் தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் மிகக்கடுமையாகவும் உள்ளது. கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியாமல் வயது நிரம்பியவர்களே திணறி வருவதன் காரணமாக, வாய்ப்புள்ள பல தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணி புரியவும் அனுமதித்துள்ளன. அதுமட்டுமன்றி கொரோனா நோய்த்தொற்றுப் பரவலும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

பள்ளி திறப்பதை தள்ளி வையுங்கள்

ஆனால், இவற்றையெல்லாம் கவனத்திற்கொள்ளாமல் மாணவர் சேர்க்கை என்ற பெயரில் பகற்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து தமிழ்நாடு அரசு சூன்01 முதல் பள்ளிகளைத் திறக்க முடிவெடுத்திருப்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். அரசின் சிறிதும் பொறுப்பற்ற இம்முடிவு மாணவர்களின் உடல் மற்றும் மன நலனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.ஆகவே, தமிழ்நாடு அரசு கோடை வெப்பத்தையும், கொரோனோ நோய்த்தொற்றுப்பரவலையும் கருத்திற்கொண்டு, மாணவமாணவியர் நலன் காக்கும் வகையில் பள்ளிகள் திறக்கும் முடிவை, தற்போதைய சூழலில் மேலும் 15 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

கூவத்தூர் கூத்து, அருவருப்பான நடனங்கள்... ஒட்டுமொத்த தமிழ்நாடும் காறித் துப்பியதை இபிஎஸ் மறந்து விட்டாரா-திமுக
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: கார் விபத்து - நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!