தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதியாரியாக மணிகண்ட பூபதி என்பவரை தமிழக பள்ளிக்கல்வித் துறை நியமித்தது. இதற்கு, திமுக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக ஊடங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவு, தஞ்சாவூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு என தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றி பிரச்னைகள் வந்தவாறு இருக்கிறது. தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதியாரியாக மணிகண்ட பூபதி என்பவரை தமிழக பள்ளிக்கல்வித் துறை நியமித்தது. இதற்கு, திமுக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக ஊடங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என்றும், பள்ளிக்கல்வித்துறையில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்து வந்ததனர் . தொடர்ச்சியான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மணிகண்ட பூபதி நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துளளதாக தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் செய்திகளுக்கு..ஹோட்டல் ரூமே கதி.. காதலர்களுடன் கும்மாளம் - 550 சவரன் நகையை மாடல் அழகியிடம் பறிகொடுத்த தொழிலதிபர்
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கல்வித் துறை அதிகாரிகள், மாணவர்களுக்கு தேவையான பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதா? என்று கண்காணிக்க வேண்டும். அவற்றை அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்ச்சிக் குறைவான பள்ளிகளை கண்டறிந்து தேர்ச்சியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.
இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களில் புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில் பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆலோசனை செய்ய வேண்டும். எடுக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்த ப்பட்டதா ? என்பதை ஆராய வேண்டும்.பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா ? என ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு..“என்னை சந்திக்க வராதீர்கள்..எம்ஜிஆர் பாடல் !” சசிகலா திடீர் உத்தரவு - தொண்டர்கள் ஷாக்
இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் வழங்கப்படுகிறதா ? என ஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழகத்தில், 2,381 பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறைக்கு, ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், நபார்டு மூலம், ரூ.800 கோடி வழங்கப்பட்டுள்ளது. அந்நிதியில், பள்ளி கட்டிடங்கள் கட்ட முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் சுமார், 2,500 பள்ளிகளில் உரிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. எனவே அந்த பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட முக்கியத்துவம் அளிக்கப்படும். கல்வி தொலைக்காட்சியின் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் அதற்கு சி.இ.ஒ நியமிக்க முடிவெடுத்தோம். 79 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஒரு கமிட்டியினர் தான் தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஒரு நபரின் பின்புலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
அதன் காரணமாக அவர் நியமனத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்தில் எந்த ஒரு சிறு சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என முதலமைச்சர் கூறி உள்ளார்.அவரின் வளர்ப்பு நான். எந்த விதத்திலும் ஏமாந்து விட மாட்டேன். இவ்விவகாரம் தொடர்பாக கருத்துக்கள், ஆலோசனைகள், விமர்சனங்கள், கோரிக்கைகள் வைத்த அனைவருக்கும் நன்றி. ‘Resign Anbil Mahesh’ என்று பதிவிட்டாலும், நீங்கள் வைக்கும் விமர்சனத்தை நேர்மறையாக தான் எடுத்து கொள்வேன்' என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..டெல்லியில் சந்தித்த அந்த 3 பேர்.. அதிமுகவுக்கு டஃப் கொடுத்த ஸ்டாலின் - திமுக Vs அதிமுக தொடரும் மோதல்