பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. 200க்கு 200 கட் ஆஃப் எடுத்து அசத்திய அரசு பள்ளி மாணவி..

By Thanalakshmi VFirst Published Aug 17, 2022, 2:08 PM IST
Highlights

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவி 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளார். 
 

தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் 133 மாணவ, மாணவிகள் 200 க்கு 200 கட் -ஆஃப் மதிப்பெண்களை பிடித்து முதலிடம் எடுத்துள்ளனர். அதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி பயின்ற மாணவி பிருந்தா என்பவரும் ஒருவர். 

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 431 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. அங்கு இளநிலை பொறியியல் படிப்புகளில் மட்டும் மொத்தம் 1.48 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த கல்வியாண்டிற்கான இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பதிவு ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை மொத்தம் 2,11,905 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ள நிலையில், இதில், 1,58,157 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தான்..! உற்சாகத்தில் ஆதரவாளர்கள்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?

இந்தநிலையில், பொறியியல் கலந்தாய்வும் இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வளாகத்தில் நேற்று வெளியிட்டார். 

மேலும் இந்தாண்டு ஒரே மாதிரி கட் ஆஃப் வந்தால் பயன்படுத்தப்படும் சமவாய்ப்பு (ரேண்டம்) எண் இல்லாததால், யார் பெயரேனும் விடுபட்டிருந்தால் அதன் விவரங்களை ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அரசுப் பள்ளி மாணவருக்கான 7.5 % இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க தவறியவர்களும் ஆகஸ்ட் 19-க்குள் மாணவர் சேர்க்கை சேவை மையத்தை அணுகி தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் படிக்க:வீட்டை மட்டுமல்ல,அரசியல் கட்சியையும் யாராலும் அடாவடியாக அபகரிக்க முடியாது...! இனி வசந்த காலம் தான் - ஓபிஎஸ்

2022 - 23 ஆம் கல்வியாண்டில், அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இந்தாண்டு 10,968 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் நிகழாண்டு முதல் தொழிற்கல்வி பிரிவு மாணவா்களுக்கு 175 (2%) இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 23-ம் தேதி வரை நடக்க உள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கி நடக்க உள்ளது. 

இந்நிலையில் தரவரிசைப்பட்டியலில் 133 பேர் 200க்கு 200 கட் ஆஃப் பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களது தரவரிசை விவரங்களை www.tneaonline.org  என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். பொதுகலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிருந்தா அரசு பள்ளி பிரிவில் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று, முதலிடத்தை பிடித்துள்ளார்.

click me!