இந்த மனசுதான் சார் கடவுள்.. கஞ்சிக்கு வழியில்ல, ஆனால் பசியால் வாடும் இலங்கைக்கு 10 ஆயிரம் கொடுத்த பிச்சைகாரர்

By Ezhilarasan BabuFirst Published Aug 17, 2022, 1:51 PM IST
Highlights

தமிழகத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் இலங்கையை பசியால் வாடும் மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியாக கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தான் யாசகம் பெற்ற  பணத்தில் 5.6 லட்சம்  ரூபாய் அளவுக்கு  அவர் கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் இலங்கையை பசியால் வாடும் மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியாக கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தான் யாசகம் பெற்ற  பணத்தில் 5.6 லட்சம்  ரூபாய் அளவுக்கு  அவர் கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறினார், சாதி, மதம், மொழி பேசுபவர்களுக்கு மத்தியில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவர் பழம்பெரும் தமிழர் கணியன் பூங்குன்றனார், இந்த வரிசையில் தனக்கு உணவில்லை என்றாலும் தான் யாசகம் பெற்ற பணத்தை மற்றவர்களுக்கு கொடுத்து  பிச்சைக்காரர் ஒருவர் மனியநேயம் காட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- 

இதுவரை இல்லாத அளவிற்கு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, லட்சக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர், இந்தியா உள்ளிட்ட நாடுகள் அந்நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி சேர்ந்த பூல் பாண்டி என்ற பிச்சைக்காரன் கோவில் திருவிழாவில் யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபுல் பாண்டி, 72 வயதாகும் இவர், மனைவி உயிரிழந்த பின்னர் பலபகுதிகளில் பிச்சை எடுக்கத் தொடங்கினார், அதில் கிடைக்கும் பணத்தை அவர் தான் மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல், ஏழை எளிய மக்களுக்கு, படிக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, கொரோனா காலத்தில் வறுமைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு உதவி என இதுவரை 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை கொடை வழங்கியுள்ளார்.

இந்த வரிசையில் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி  உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தனக்கு யாசகம் மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர் கொடை அளித்து வருகிறார். இந்த வரிசையில் இலங்கையில் தவித்து வரும் மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியை விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் மேகநாத ரெட்டியை நேரில் சந்தித்து அவர் வழங்கியுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.  
 

click me!