அமைச்சர் கார் மீது காலணி வீச்சு..பதுங்கி இருந்த பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் ..செல்போன் மூலம் சிக்கிய பின்னணி

By Thanalakshmi VFirst Published Aug 17, 2022, 12:39 PM IST
Highlights

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணியை வீசிய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள தமிழக பாஜக மகளிரணியைச் சேர்ந்த 3 பேரையும் 30 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகளுடான சண்டையில் உயிரிழந்த மதுரை மாவட்டம், து. புதுப்பட்டி சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் கடந்த சனிக்கிழமை மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது, அரசின் விதிமுறைப்படி, ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விமான நிலையம் வந்தார். 

அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமாலை ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவதாக இருந்தது. இதனால் அங்கு பாஜக தொண்டர்கள் கூடி இருந்தனர். இந்நிலையில், பாஜகவினர் வெளியேற்றும் படி அமைச்சர் கூறியதாக சொல்லப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சருக்கு எதிராக எதிராக கோஷங்களை எழுப்பினர்.  

மேலும் படிக்க:இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆனது செல்லாது...! அதிர்ச்சி அளித்த உயர்நீதிமன்றம்...உற்சாகத்தில் ஓபிஎஸ்

இதைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்திவிட்டு, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அமைச்சர் போக விடாமல், அவரது காரை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த பாஜக பெண் நிர்வாகி ஒருவர் தனது காலணி எடுத்து அமைச்சர் கார் மீது வீசினார். இதையடுத்து இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அங்கிருந்தவர்களை அப்புறபடுத்தி, அமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். 

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு சம்பவம் தொடர்பாக, மதுரை அவனியாபுரம் காவல்துறையினர்,பாஜக பெண் நிர்வாகி உட்பட 40-க்கும் மேற்பட்டோர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பாஜகவைச் சேர்ந்த மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார், பிரச்சார பிரிவு செயலர் பாலா, முன்னாள் மாநகராட்சி மண்டலத் தலைவரும், தற்போது மதுரை மாவட்ட பாஜக துணை தலைவர் ஜெயவேல் ஆகிய 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க:திமுகவில் இணைகிறாரா பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்

அமைச்சரின் கார் மீது காலணி வீச்சு தொடர்பான வீடியோ ஆதாரங்களை கொண்டு விசாரித்த தனிப்படை போலீசார், மதுரை மாநகர மாவட்ட மகளிர் அணி செயலரான சரண்யா, பாஜக மகளிரணியைச் சேர்ந்த தனலட்சுமி மற்றும் தெய்வாணை ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில், செல்போன் டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில், கட்சிக்காரர் ஒருவரின் வீட்டில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அவர்கள் மூவரையும் கைது செய்தனர். 

மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 30 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.  அமைச்சர் கார் மீது காலணி வீச்சு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

click me!