திருமாவளவன் மணி விழா..! சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்! ஸ்டாலின் வாழ்த்து

Published : Aug 17, 2022, 11:12 AM IST
திருமாவளவன் மணி விழா..! சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்! ஸ்டாலின் வாழ்த்து

சுருக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி  அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 திருமாவளவன் மணி விழாவில் ஸ்டாலின்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் 60-வது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள்,தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் மணி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவை பொறுத்தவரைக்கும் எப்போதும் கொள்கையில் உறுதியாக இருக்கும். நான் இப்போது இரண்டு பொறுப்புகளில் அமர்ந்து இருக்கிறேன். அது  எல்லாருக்கும் தெரியும். ஒன்று கட்சி தலைவர் பொறுப்பு, இன்னொன்று அனைவருக்குமான தமிழக முதல்வர் பொறுப்பு.  உங்களால் உட்கார்ந்து இருக்கக்கூடியவன் நான். தமிழக முதல்வர் என்ற முறையில் மத்திய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை தர வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்

எனவே மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலே உறவு இருக்கிறதே தவிர, திமுகவுக்கும், பாஜகவுக்கும் அல்ல. திமுகவுக்கும், கொள்கைக்கும், பாஜ கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது என கூறினார். எனவே  திருமாவளவன் கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம். எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையும் திமுகவின் கொள்கைகளை இந்த ஸ்டாலின் விட்டு கொடுக்க மாட்டான். திருமா கூறியது போல குறைந்தப்பட்சம் சமரசம் கூட செய்து கொள்ள மாட்டான் இந்த ஸ்டாலின் என கூறியிருந்தார். இந்தநிலையில் திருமாவளவனின் மணிவிழாவையொட்டி  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மணிவிழா காணும் அன்புச் சகோதரர் 'எழுச்சித் தமிழர்'  திருமாவளவனை நெஞ்சார வாழ்த்துகிறேன். சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி, சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்! என தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு மிக அருகில் நிற்கும் சீன உளவு கப்பல்.! ராமேஸ்வரம் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

டிடிவி தினகரன் வாழ்த்து

இதே போல அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மணிவிழா காணும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அருமை நண்பர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் தமிழ்ச் சமூகத்திற்கு இன்னும் பல்லாண்டு காலம் அவர் பணியாற்ற வேண்டுமென எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜகவுடன் குறைந்த பட்ச சமரசம் கூட செய்ய மாட்டோம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கட்டம் கட்டும் திமுக..? ஸ்டாலினுக்காக களம் இறங்கும் இந்தியா கூட்டணி
வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!