அரும்பாக்கம் வங்கி கொள்ளை.. திட்டம் போடுவதற்கு இந்த தமிழ் படத்தை தான் பார்த்தேன்..வாக்குமூலத்தில் பகீர்.

By Thanalakshmi VFirst Published Aug 17, 2022, 10:58 AM IST
Highlights

சென்னை வங்கிக்கொள்ளையில் ஈடுபட்ட முருகன் கொள்ளையடிப்பதற்காக ஜென்டில்மேன் படத்தை சுமார் 10 முறை பார்த்ததாகவும் அரும்பாக்கம் வங்கி தவிர பிற வங்கிகளிலும் கொள்ளை அடிக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தனது  வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
 

கடந்த 13 ஆம் தேதி சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வங்கியில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் மேலாளராக பணியாற்றிய முருகன், தனது கூட்டாளிகளுடன் சேர்த்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான். சம்பவத்தன்று பணியில் இருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருத்து கொடுத்து, வங்கி ஊழியர்களை கத்தி காட்டி மிரட்டி,பாதுகாப்பு பெட்டக அறையின் சாவி வாங்கி 11 கோடி மதிப்பிலான சுமார் 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. 

மேலும் படிக்க:சென்னை தனியார் வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு பணம் கொள்ளை... அதிர்ச்சி தரும் முதற்கட்ட தகவல்!!

பின்னர் வங்கி ஊழியர்களை கை கால்களை கட்டி போட்டு, வாயில் துணை வைத்து அறையை பூட்டி விட்டு கொள்ளை கும்பல் தப்பித்துள்ளது. வங்கியில் பட்டப்பகலில் நடந்தேறிய இந்த கொள்ளை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை கும்பலை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இதுவரை முக்கிய குற்றவாளி முருகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகளை மூன்றே நாட்களில் போலீஸார் மீட்ட நிலையில், மேலும் ஒருவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். நகைகளை உருக்கித் தருவது தொடர்பாக பேரம் பேசிய கோவை நகை வியாபாரியின் உறவினரிடமும் விசாரணை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க:சென்னையில் வங்கி கொள்ளை.. 72 மணி நேரத்தில் முக்கிய குற்றவாளி கைது.. 18 கிலோ தங்கம் மீட்பு.. நடந்தது என்ன..?

இந்நிலையில் முக்கிய குற்றவாளி முருகனிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கியில் கொள்ளையடிப்பதற்கு, முருகன் பல்வேறு திரைப்படங்களை பார்த்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட அரும்பாக்கம் வங்கியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், அங்கு தங்க நகைகள் வைக்கப்படிருக்கும் இடம் குறித்து தெரிந்துக்கொண்டேன்.

அதன் பின்னர், நண்பர்களுடன் சேர்த்து கொள்ளையடிப்பதற்கு திட்டம் போட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து 10 முறை பார்த்ததாக கூறிய முருகன், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளான். மேலும் வங்கியில் எப்படி கொள்ளையடிப்பது, போலீசிடம் சிக்காமல் எப்படி தப்பிப்பது என்பது குறித்து  நண்பர்களுடன் இணைந்து ஒரு மாதம் ரகசிய திட்டமிட்டதாகவும் கூறி திடுக்கிட வைத்துள்ளான்.

மேலும் படிக்க:சென்னையில் மேலும் ஒரு கொள்ளை.. கத்தி முனையில் மிரட்டி முகமூடி கும்பல் துணிகரம்.. அச்சத்தில் மக்கள்

கொள்ளைக்கு தேவையான பைக், கார்கள் நண்பர்களிடம் இருந்து வாங்கியதாகவும் அரும்பாக்கம் வங்கியைத் தவிர மற்ற வங்கியிலும் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தாகவும் கூறியுள்ளார். மேலும் கொள்ளையடிப்பதற்காக ஜென்டில்மேன் திரைப்படம் உள்ளிட்ட கொள்ளை குறித்து திரைப்படங்களை பலவற்றை பார்த்து இதற்கு திட்டம் போட்டதாக தெரிவித்துள்ளான். மேலும் வலிமை படத்தில் வரும் வசனத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பாக முருகன் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

click me!