கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்... பள்ளி தாளாளர் உட்பட மூவர் கைது!!

By Narendran S  |  First Published Jul 17, 2022, 11:16 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 


கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியூர் என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து மாணவி ஒருவர் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையும் வந்துள்ளது. இதுத்தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், பள்ளியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம் ஏற்பட திமுக அரசு செய்த நான்கு தவறுகள் என்னென்ன.? பட்டியலிட்டு விளாசிய தமிழக பாஜக.!

Tap to resize

Latest Videos

காவல்துறையின் பாதுகாப்பை மீறி, ஆயிரக்கணக்கானோர் பள்ளிக்குள் நுழைந்து, பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து, காவல்துறையினரின் வாகனங்களுக்கு எல்லாம் தீவைத்து, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. இதனிடையே கள்ளகுறிச்சி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளகுறிச்சி பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட 55 காவலர்கள் 52 பேர் வன்முறையின்போது காயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரம்.. திமுக ஆட்சி வந்தது முதலே இப்படித்தான் நடக்குது.. போட்டுத்தாக்கிய வானதி சீனிவாசன்!

தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மாணவியின் இறப்பில் உள்ள சந்தேகங்களை தீர்ப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அனைத்து கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பெற்றோர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் குற்றப்பிரிவு விசாரணை இருக்கும். மாணவி மரணம் தொடர்பான வழக்கு தனியாகவும், பள்ளிக்கூடம் தாக்கப்பட்ட வழக்கு தனியாகவும் விசாரணை நடத்தப்படும். பள்ளிக்கூடத்தை தாக்கியவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். 

click me!