கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வன்முறை சம்பவ எதிரொலி... தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம்!!

By Narendran S  |  First Published Jul 17, 2022, 7:44 PM IST

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டித்து நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். 


கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டித்து நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியூர் என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து மாணவி ஒருவர் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையும் வந்துள்ளது. இதுத்தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், பள்ளியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். காவல்துறையின் பாதுகாப்பை மீறி, ஆயிரக்கணக்கானோர் பள்ளிக்குள் நுழைந்து, பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து, காவல்துறையினரின் வாகனங்களுக்கு எல்லாம் தீவைத்து, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையும் படிங்க: எங்களை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது.. நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்.. பள்ளி செயலாளர் வீடியோ

Tap to resize

Latest Videos

இதில் 30க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். அந்த பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள், ஆசிரியர்களின் சான்றிதழ்கள், விடுதியில் இருக்கின்ற சிலிண்டர் உள்பட அனைத்தையும் தீக்கிரையாக்கியுள்ளனர். பள்ளி ஆய்வகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடபட்டன. இதனால் அந்த பள்ளிக்கு சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கனியூர் தனியார் பள்ளி மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை முதல் செயல்படாது என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு எல்லாம் எந்தளவுக்கு பாதுகாப்பு அளித்து சட்டம் இயற்றியிருக்கிறதோ, அதேபோல் தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

இதையும் படிங்க: கலவரத்தில் 17 போலீசாருக்கு காயம்.. திடீரென்று வன்முறை மூண்டது எவ்வாறு..? எஸ்.பி பரபரப்பு தகவல்..

இந்த கோரிக்கைகளுக்காவும், தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிக்க நீதி, நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பில் பொது வேலைநிறுத்தத்தை நாங்கள் மேற்கொள்கிறோம். தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி நல்லதொரு முடிவை காண வேண்டும். இல்லாவிட்டால், தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது, பள்ளிகளை மூடுவது என்று முடிவெடுத்துள்ளோம். நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகிகளும் கருப்பு பேட்ஜ் அணிந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாதுகாப்பு அளித்திட வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

click me!