
அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆவது மாநில நிதிக்குழு மானிய நிதியாக ஆயிரத்து 128 கோடி ரூபாய் ஒதுக்கிடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமம், ஒன்றியம், மாவட்டம் உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம், மின்கட்டணம், பராமரிப்பு, ஊதியம் உட்பட அனைத்து வகை செலவினங்கள் ஆகியவை மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி, உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரம் ஆகியவற்றை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுமா..? நாளை கோர்ட் உத்தரவு..
அந்த வகையில் மாநில அரசின் 5 ஆவது மாநில நிதிக்குழு மானிய நிதியாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி, 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கு 5 ஆவது மாநில நிதிக்குழு மானிய நிதியாக மொத்தம் ரூ.5 ஆயிரத்து 80 கோடியே 87 லட்சத்து 45 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையில் மூன்று மாதங்களுக்கு மாவட்ட ஊராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் ரூ.871 கோடியே 6 லட்சத்து 928 ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கலவரத்தில் 17 போலீசாருக்கு காயம்.. திடீரென்று வன்முறை மூண்டது எவ்வாறு..? எஸ்.பி பரபரப்பு தகவல்..
388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 369 கோடியே 58 லட்சத்து 36 ஆயிரத்து 286 ரூபாயும், குறைந்தபட்ச ஒதுக்கீடாக 349 கோடியே 2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 410 கோடியே 94 லட்சத்து 23 ஆயிரத்து 571 ரூபாயும், குறைந்தபட்ச ஒதக்கீடாக 225 கோடியே 45 லட்சம் ரூபாயும் என மொத்தம் ஆயிரத்து 127 கோடியே 99 லட்சத்து 66 ஆயிரத்து 785 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.