Kallakurichi : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 40க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம், இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருனாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 42 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. இந்த சூழலில் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்துள்ள நிலையில், தற்பொழுது பலி எண்ணிக்கையானது 43 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சை பெற்று வரும் ஒரு சிலர் நிலைமை, கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. இன்று மாலை கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அளித்த தகவலின்படி பழனி என்பவரின் மகன் ஜெகதீசன், சின்னு என்பவருடைய மகன் கந்தன், ராஜேந்திரன் என்பவருடைய மகன் சுரேஷ், மணி என்பவருடைய மகன் செல்வம், முத்துசாமி என்பவருடைய மகன் ஆறுமுகம்.
உஸ்மான் என்பவருடைய மகன் நூறு பாஷா, வெள்ளையன் என்பவருடைய மகன் அய்யாவு, ராஜா என்பவருடைய மகன் முருகன், பச்சமுத்து என்பவருடைய மகன் தனுஷ்கோடி, கருப்பன் என்பவருடைய மகன் கோபால், சுப்பிரமணி என்பவருடைய மகன் கண்ணன், ஆறுமுகம் என்பவருடைய மகன் பூவரசன், கருப்பன் என்பவருடைய மகன் கணேசன், ராமசாமி என்பவருடைய மகன் குப்புசாமி, ரவி என்பவருடைய உறவினர் லஷ்மி, குஞ்சு நாயக்கர் என்பவருடைய மகன் ஜெகதீசன்.
கருப்பன் என்பவருடைய மகன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 26 பேரும், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரும், முந்தியப்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு சார்பாக இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் இதற்கான காசோலையை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்? கள்ளச்சாராய வழக்கில் இவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்?