300 அடி பள்ளத்தில் பாறைகள் சரிந்து விழுந்து 3 பேர் பலி.. கல்குவாரி உரிமையாளர் கைது..

By Thanalakshmi VFirst Published May 15, 2022, 12:37 PM IST
Highlights

திருநெல்வேலி மாவட்டம் மூன்னீர்பள்ளம் அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு குவாரியில் குடைத்து வைத்திருக்கும் கற்களை லாரி மூலம் எம்.சாண்ட் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்து செல்லும் பணியில் தொழிலாளர் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பாறை சரிந்தது. இதில், கற்கள் ஏற்றி சென்ற லாரி மற்றும் பாறை அள்ளும் இயந்திரங்கள் சிக்கி கொண்டன.

மேலும் 300 அடி பள்ளத்தில் பாறை சரிந்ததில் டிரைவர்கள், தொழிலாளர்கள் என 6 பேர் சிக்கி கொண்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பள்ளத்தில் சிக்கிக்கொண்டவர் மீட்டனர். இந்த விபத்தில் பரிதாபமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  பாறைகள் சரிந்து விழுவதால், தற்காலிகமாக மீட்பு பணிகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் 300 அடி பள்ளத்தில் 2 ஜேசிபி இயந்திரம் மற்றும் 2 லாரிகள் சிக்கி கொண்டதாக கூறப்பட்டது.  ராட்சத பாறை விழுந்த இடத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், 2  பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: "யாராவது என்ன காப்பாத்துங்களேன்".. 300 அடி பள்ளத்தில் சிக்கி கொண்ட 3 தொழிலாளர்கள் பலி ..2 பேர் உயிருடன் மீட்பு

click me!