எங்கள் வாழ்வாதாரம் மொத்தமா அழிஞ்சு போச்சு….10 வருஷம் பின்னால போயிட்டோமே !! தஞ்சை, நாகை மாவட்ட மக்கள் கண்ணீர்….

By Selvanayagam PFirst Published Nov 20, 2018, 8:13 AM IST
Highlights

கஜா புயலின் கோர தாண்டவத்தால் முற்றிலும் சிதைந்து போன தஞ்சை, நாகை, தேக்கு புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தென்னை, பலா,சவுக்கு போன்ற மரங்கள் சாய்ந்து விழுந்ததால் தற்போது அந்த மாவட்ட விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு நிற்கின்றனர். இதில் இருந்து அவர்கள் மீண்டு வர இன்னும் பத்தாண்டுகள் ஆகும் என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் அனைத்து பகுதிகளும், கஜா புயலினால் முழுமையாக சேதமடைந்துள்ளன. பெரும்பான்மையான வீடுகள் பெரும் சேத மடைந்துள்ளன. வீடுகள் தரைமட்டமாயின.

தென்னை, தேக்கு மரங்கள் விழுந்து ஓடுகள் நொறுங்கியும், சுவர்கள்இடிந்தும் சேதமடைந் துள்ளன. வீட்டை விட்டு வெளியே வர இயலாத அளவிற்கு வீட்டின் முன்பும், உட்பிரிவு சாலைகளிலும், மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து, சாலைகள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

உடுத்த உடை கூட இல்லாத சூழல். குடிநீர், உணவு கிடைக்காமல், மிகுந்த வேதனையில் தவித்து வருகிறார்கள். மின்சாரமும், தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் தரைமட்டமாயின. பார்வைக்கு எட்டிய வரை மரங்களே யில்லை.

அனைத்து போக்கு வரத்து சாலைகளிலும், இரு பக்கங்களிலும், அனைத்து மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. அப்பகுதியில் வாழும்பெண்களும், குழந்தை களும், நாங்கள் மரணத்தின் எல்லைக்கே சென்று வந்ததாகவும், நாங்கள் உயிர்பிழைப்போம் என்று நினைத்து கூட பார்க்க வில்லை எனவும், புயல் மீட்புபணி எதுவும் எங்கள் பகுதியில் நடைபெற வில்லை எனவும் தெரிவித்தனர்.

அப்பகுதியில் வாழும் மக்கள், நாங்கள் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னோக்கிய வளர்ச்சிக்கு சென்று விட்டோம், எங்கள் உடமைகள் பறிபோயின. வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விட்டது. நாங்கள் இயல்பு நிலைக்கு வர,குறைந்தபட்சம் பத்தாண்டு கள் ஆகும் என கண்ணீர் விட்டு கதறியழுகின்றனர்.

நிவாரணஉதவிகள் எதுவும் எங் களுக்கு கிடைக்கவே யில்லை, எனவும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அடிப்படைத் தேவைகள் கிடைத்திட உரிய நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர்.

click me!